/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிறைவடைந்த கந்த சஷ்டி விழா சிவன்மலையை அடைந்த சுவாமி
/
நிறைவடைந்த கந்த சஷ்டி விழா சிவன்மலையை அடைந்த சுவாமி
நிறைவடைந்த கந்த சஷ்டி விழா சிவன்மலையை அடைந்த சுவாமி
நிறைவடைந்த கந்த சஷ்டி விழா சிவன்மலையை அடைந்த சுவாமி
ADDED : நவ 10, 2024 03:00 AM
காங்கேயம்: காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா கடந்த, 2ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரர் சுவாமி கோவிலுக்கு, சிவன்மலை சுப்ரமணிய-சுவாமி உற்சவர் சிலை சப்பரத்தில் கொண்டு செல்லப்பட்டது. சஷ்டி விழாவையொட்டி தினமும் காலை, மாலையில்
அபிஷேகம், ஆராதனை நடந்தது.
முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கடந்த, 7ம் தேதி இரவு, நேற்று முன்தினம் இரவு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. விழா நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு உற்சவம், சுவாமி திருமலைக்கு எழுந்தருளினார். இதை-யடுத்து கந்த சஷ்டி விழா நிறைவுக்கு வந்தது.