/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
/
தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 18, 2024 01:22 AM
ஈரோடு, டிச. 18-
ஈரோட்டில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் குமாரசாமி, இயற்கை விவசாயி அரச்சலுார் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுப்பு வரவேற்றார்.
கூட்டுறவு கடனை திரும்ப செலுத்திய நிலையில், கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியானது. எனவே கடனை திரும்ப செலுத்திய, 734 விவசாயிகளுக்கு, 20 கோடி ரூபாயை திரும்ப வழங்க வேண்டும்.
டவுன் பஞ்.,களில் உழவர் சந்தை ஏற்படுத்த வேண்டும். கீழ்பவானி பாசன பகுதியில் உள்ள, 26 கசிவு நீர் திட்டங்கள் மூலம், 30 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. கழிவு நீர் அணைக்கட்டுகளையும், கால்வாய்களையும் புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
விவசாய நிலங்களை யானை, காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதை தடுக்க நவீனமாக கம்பி வேலி அமைக்க வேண்டும்.
கீழ்பவானி பாசனப்பகுதியில், இரண்டாம் மண்டலத்துக்கு கடலை, எள் சாகுபடி செய்ய விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், அந்தந்த பகுதியில் உள்ள கொப்பு வாய்க்கால்களை துார்வார, 100 நாள் வேலை திட்டப்பணியாளர்களை ஒதுக்கி, பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.