/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி
/
தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி
ADDED : டிச 18, 2025 05:15 AM

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்பு-ணர்வு பேரணி நடந்தது.
கலெக்டர் கந்தசாமி, பேரணியை துவக்கி வைத்தார். தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நேற்று முதல் வரும், 27 வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு பணியாளர்களுக்கு கணினி தமிழ் கருத்த-ரங்கு, ஆட்சி மொழி மின் காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு, வணிக நிறுவனங்-களில் தமிழில் பெயர் பலகை அமைக்க வலியுறுத்தி, வணிக நிறு-வன உரிமையாளர்களுடன் கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் திட்டமி-டப்பட்டுள்ளன.இதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியாக, பெருந்துறை சாலை, குமலன்குட்டை வரை சென்று கலெக்டர் அலுவலகம் திரும்பினர். தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.

