ADDED : ஏப் 30, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு::
பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்., 29 முதல் மே, 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அரசு அறிவித்தது.
இதில் அரசு அலுவலர், பணியாளர்களிடையே அலுவலக தமிழ் மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க, கையெழுத்து போட்டி, அறிவியல் தமிழ், கணினி தமிழ் குறித்த வினாடி - வினா நிகழ்ச்சி, தலைப்பு கொடுக்கப்பட்ட உடன் யாதொரு தயாரிப்பும் இன்றி உடனடியாக பேசும் பேச்சு போட்டி, படத்தை அடிப்படையாக கொண்ட கதை சொல்லும் போட்டி, தமிழ் புதினங்கள், கவிதை வாசிப்பு போட்டி, அலுவலர்களுக்கு இடையே குறிப்பு எழுதும் போட்டி, கணினி தமிழ் தொடர்பான போட்டி, தமிழ் இலக்கியங்கள் தொடர்பான கதை சொல்லும் போட்டிகள், தமிழ் இலக்கியம் மற்றும் கலை நிகழ்ச்சி நடத்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.