ADDED : நவ 09, 2026 06:02 AM

ஈரோடு,:திருப்பூர்
மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஊதியூரில் இருந்து நாமக்கல் மாவட்டம்
புதுச்சத்திரத்துக்கு பால் கழிவுகளை ஏற்றிய டேங்கர் லாரி நேற்று
மதியம், 2:00 மணியளவில் புறப்பட்டது.
கொடுமுடி, சோள
காளிபாளையம் பகுதியில் சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி
சாலையோர இடதுபுறம் இருந்த ஊராட்சி மேல்நிலை தொட்டி
சுற்றுச்சுவரில் மோதி நின்றது. சேலம் மாவட்டம் தலைவாசலை சேர்ந்த
செல்லகண்ணு, 27, லாரியை ஓட்டினார். லாரியின் முன்புறம் அப்பளம் போல்
நொறுங்கி, சுவரும் இடிந்தது. இடிபாடுகளில் கால் சிக்கி கொண்டதால்,
டிரைவர் வெளியே வர முடியாமல் தவித்தார்.
கொடுமுடி தீயணைப்பு
நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. நிலைய சிறப்பு அலுவலர் கண்ணன்
தலைமையிலான வீரர்கள் சென்று, 30 நிமிடம் போராடி இடிபாடுகளில்
சிக்கிய செல்லகண்ணுவை மீட்டனர். கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். துாங்கி விட்டதால் விபத்து நேரிட்டது
தெரிய வந்தது.
