/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடை புறம்போக்கில் தார் சாலை; பணியை தடுத்து நிறுத்த முறையீடு
/
ஓடை புறம்போக்கில் தார் சாலை; பணியை தடுத்து நிறுத்த முறையீடு
ஓடை புறம்போக்கில் தார் சாலை; பணியை தடுத்து நிறுத்த முறையீடு
ஓடை புறம்போக்கில் தார் சாலை; பணியை தடுத்து நிறுத்த முறையீடு
ADDED : மே 23, 2024 06:55 AM
ஈரோடு : ஓடை புறம்போக்கில், தார் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தக்கோரி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் ஆகியோருக்கு, இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ளம் ஓடை பாதுகாப்பு நலச்சங்க தலைவர் சண்முகசுந்தரம், மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பினார்.
அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள சாலைகள், அரசு ஆவணங்களில் ஓடை புறம்போக்கு நிலங்களாக பதியப்பட் டுள்ளது. இவ்விடத்தில் தார்சாலை அமைக்க, தேர்தலுக்கு முன்பே ஜல்லி கற்கள் கொண்டு வந்த கொட்டினர். அப்போதைய தாசில்தார் இடத்தை ஆய்வு செய்து, அவை அனைத்தும் அரசு ஓடை புறம்போக்கு நிலம்; அங்கு எவ்வித பணிகளும் செய்யக்கூடாது' எனக்கூறி பணிகளை நிறுத்தி சென்றார். தற்போது அதே இடத்தில் மீண்டும் சாலை அமைக்கும் பணியை துவக்கி உள்ளனர். இதுபற்றி தற்போதைய தாசில்தாரிடம் புகார் செய்தோம். இரு தினங்களுக்கு முன் தாசில்தார். நில அளவையர், கதிரம்பட்டி வி.ஏ.ஓ., ஆகியோர் ஆய்வு செய்து, 'வண்டிப்பாதை என ஆவணங்களில் 'டாட் மார்க்' உள்ளதாகவும், அங்கு பணி செய்வதை தடுத்து நிறுத்த முடியாது' என்றார்.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓடை புறம்போக்கு நிலங்கள் இதுவரை அரசு ஆவணப்படி அளந்து, அத்து குறித்து கற்கள் நடப்படவில்லை. அரசு புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அங்கு சாலை பணி செய்வதை அனுமதிப்பது, நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பானது. தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ள நிலையில், இப்பணி செய்யக்கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

