/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் குடோன் முன்ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் குடோன் முன்ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 22, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:பவானி அடுத்த சூரியம்பாளையத்தில், மாவட்ட டாஸ்மாக் குடோன் உள்ளது. இதன் அருகே டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
டாஸ்மாக் மானிய கோரிக்கை சட்டசபையில் நேற்று நடந்தது. இதையொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வு வயதையும், 60 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாட்டாளி தொழிற்சங்க ஈரோடு மாவட்ட தலைவர் கருணாகரன், சி.ஏ.டி.யு., தொழிற்சங்க பொருளாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.