தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நாளை துவக்கம்

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நாளை துவக்கம்

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நாளை துவக்கம்


ADDED : ஜூன் 30, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் நாளை முதல் ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு ஈரோடு மாவட்டத்தில் துவங்கி நடக்கிறது.

நடப்பு, 2026-27ம் கல்வி ஆண்டுக்கு ஆசிரியர் பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்-வுக்கு ஆசிரியர்கள் எமிஸ் (கல்வி மேலாண்மை தகவல் முகமை) வாயிலாக விண்ணப்பிக்க ஏற்-கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னுரிமை பட்டியல், காலி பணியிட பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி முன்னுரிமை பட்டியல் நேற்று வெளியானது.நாளை அரசு, நகராட்சி மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள்ளும், நாளை மறுநாள் (2ம் தேதி) மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. 3ல் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, 4ல் அரசு, நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல், 6ல் மாவட்டம் விட்டு மாவட்டம் பணி-யிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

வரும் 7ல் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 2025 ஆகஸ்ட் 1 நில-வரப்படி பணி நிரவல், 8ல் அரசு, நகராட்சி மேல்-நிலை பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்-குனர் நிலை-1 ஆசிரியர்களுக்கு பணி நிரவல், 9ல் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் பணிபு-ரியும் முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர் நிலை-1, உடற்கல்வி இயக்குனர் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்-தாய்வு மாவட்டத்துக்குள் நடக்கிறது.

10 முதல் 15 வரை அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர் நிலை-1, உடற்கல்வி இயக்-குனர் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு நடக்கிறது.

வரும் 16ல் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்-நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசி-ரியர்களுக்கு மாவட்டத்துக்குள் பணி நிரவல், 17ல் அரசு, நகராட்சி உயர், மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-2, உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நிரவல் நடக்கிறது.

18ல் அரசு, நகராட்சி உயர்,மேல்நிலை பள்-ளியில் பணியாற்றும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி நிலை-2 மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வும், 20ல் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் பெற கலந்தாய்வு நடக்கிறது.

வரும் 21ல் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்-றுனர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்டத்துக்குள்ளும், 22ல் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் வாங்கி செல்ல பணியிட மாறுதல் கலந்தாய்வு நடக்கி-றது.

23ல் அரசு, நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு மாவட்டத்துக்குள்ளும், 24 முதல் 30 வரை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பணி-யிட மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.

இதே போல் தொடக்க கல்வி இயக்ககம் சார்பில் நாளை 1ல் மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. 2ல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கல்வி மாவட்டத்துக்குள் கலந்தாய்வு நடக்கிறது. 3ல் இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்துக்குள், மாவட்-டத்துக்குள் நடக்கிறது. 4, 6,7ல் இடைநிலை ஆசி-ரியர்கள் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல நடக்கிறது.

வரும், 8ல் தொடக்க பள்ளி தலைமை ஆசிரி-யர்கள் மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்துக்குள், மாவட்டத்துக்குள், 9ல் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு நடக்கிறது. 10ல் பட்டதாரி ஆசி-ரியர் மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்துக்குள்ளும், மாவட்டத்துக்குள்ளும், 11,13,14ல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு நடக்கிறது.

வரும், 15ல் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்துக்குள்ளும், மாவட்டத்துக்குள்ளும், 16ல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us