/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலத்தில் பைக் மோதி டீன்-ஏஜ் வாலிபர் பலி
/
பாலத்தில் பைக் மோதி டீன்-ஏஜ் வாலிபர் பலி
ADDED : மே 01, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்:டி.என்.பாளையத்தை
அடுத்த பெரியகொடிவேரி, நஞ்சன் காலனியை சேர்ந்த ராஜன் மகன் தீபக், 19,
கூலி தொழிலாளி. டூவீலரில் நண்பர் காசிநாதன், 19, என்பவருடன்
டி.ஜி.புதுார் நால்ரோடு சென்று விட்டு, பெரிய கொடிவேரிக்கு
புறப்பட்டார்.
வீர சின்னானுார் பாலம் அருகே சாலை வளைவில்
எதிர்பாராதவிதமாக, பால தடுப்பு சுவரில் டூவீலர் மோதியது. இதில்
இருவரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியே சென்ற மக்கள் மீட்டு, சத்தி
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில்
தீபக் இறந்து விட்டது தெரிந்தது. காசிநாதன் சத்தி தனியார்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பங்களாப்புதுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.