ADDED : ஜன 04, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, திலகர் வீதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் குமரன், 19; ஈரோடு மூலப்பாளையத்தில் தங்கி, பெட்டிக்கடையில் வேலை செய்தார். பல்சர் பைக்கில் ஈரோடு ஆணைக்கல்பாளையம்-திண்டல் ரிங் ரோட்டில், நேற்று முன்தினம் சென்றார்.
அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில் குமரன் படுகாயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

