/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி புறவழிச்சாலை பணி விரைவில் முடிவுக்கு வரும்; அமைச்சர் முத்துசாமி
/
கோபி புறவழிச்சாலை பணி விரைவில் முடிவுக்கு வரும்; அமைச்சர் முத்துசாமி
கோபி புறவழிச்சாலை பணி விரைவில் முடிவுக்கு வரும்; அமைச்சர் முத்துசாமி
கோபி புறவழிச்சாலை பணி விரைவில் முடிவுக்கு வரும்; அமைச்சர் முத்துசாமி
ADDED : ஜன 04, 2026 05:27 AM
கோபி: கோபியில், 2.64 கோடி ரூபாய் மதிப்பில் மலர் சந்தை வணிக வளாகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா, நகராட்சி நுழைவுவாயிலுக்கு பெயர் சூட்டும் விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சியை துவக்கி வைத்த, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கோபி நகராட்சி நுழைவு வாயிலுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு, தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை இருப்பதே காரணம் என்று, பா.ம.க., அன்புமணி கூறியுள்ளார். அவர் ஏதாவது சொல்லிக்கொண்டு இருப்பார். அதெல்லாம் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கலாம். இப்போது எல்லாம் மக்கள் கட்டுப்பாடாக பழகி விட்டனர். அவர் சொல்வதை அரசியல் ரீதியாக எடுத்து கொள்ளலாம். விஜயின் ஜனநாயகன் சினிமா படத்துக்கு, தி.மு.க., பிரச்னை கொடுப்பதாக சொல்வது குறித்து எங்களுக்கு தெரியாது. வேண்டுமென்று ஒருவரை தொல்லை கொடுக்கும் அரசாங்கம் இந்த அரசு கிடையாது. கோபியில் புறவழிச்சாலை விரைவில் முடிவுக்கு வரும் என நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு கூறினார்.
அமைச்சருடன் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், கோபி நகர செயலாளர் நாகராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

