ADDED : அக் 11, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, மொடக்குறிச்சி வீரப்பம்பாளையம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம், 30; இவர் மனைவி மைனாவதி, 26; தம்பதிக்கு குழந்தை இல்லை. பரமசிவம் சரக்கு ஆட்டோ ஓட்டுனர். மைனாவதி தனியார் பைனான்ஸ் ஊழியர். கடந்த, 8ம் தேதி மாலை ஹோண்டா சைன் பைக்கில் மனைவியை பார்த்து விட்டு பூசாரிபாளையத்துக்கு பரமசிவம் சென்றார்.
ஈரோடு-முத்துார் சாலை மண்கரடு பெட்ரோல் பங்க் அருகே எதிரே அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த பரமசிவம், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.