/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாலிபர்கள் கிண்டல்-கேலி-அச்சுறுத்தல் வெள்ளித்திருப்பூரில் மாணவியர் அச்சம்

ADDED : மார் 12, 2024 04:48 AM
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே செல்லம்பாளையத்தில் அரசு மாதிரிப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிக்கு வரும்போதும், வீடு திரும்பும்போதும் செல்லம்பாளையம் மற்றும் மூலக்கடை பஸ் நிறுத்த பகுதி வழியாக செல்ல வேண்டும். இந்நிலையில் பள்ளி முடிந்து செல்லும் மாணவியரை, டூவீலர்களில் வரும் இளைஞர்கள் கிண்டல் செய்வது, சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனால் மாணவியர் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். ஒரு சிலர் டூவீலர்களில் உரசுவது போலும், பின் தொடர்ந்தும் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலையோர ரோமியோக்களின் தொல்லை தாங்கவில்லை என்று, பெற்றோர்கள் தரப்பிலும் வேதனை எழுந்துள்ளது.
மாணவியரின் அச்சத்தை போக்க, வெள்ளித்திருப்பூர் போலீசார் அப்பகுதியில் காலை, மாலையில் ரோந்து செல்ல வேண்டும் என்றும், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.