/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பச்சைமலை பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா
/
பச்சைமலை பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா
ADDED : செப் 26, 2024 02:36 AM
கோபி: கோபி பச்சைமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலபைரவர் தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலமாக நேற்றிரவு நடந்தது. கால பைரவருக்கு நேற்று மாலை, 4:00 மணிக்கு அஷ்ட பைரவர் ேஹாமம், 6:00 மணிக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபி ேஷகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பரிகார அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* அவல்பூந்துறை அருகே, ராட்டைசுற்றிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற தென்னக காசி பைரவர் கோவில் உள்ளது. நேற்று தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னி ட்டு, விஜய் சுவாமிஜி தலைமையில்
கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஈரோடு, கோவை பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள், கருவறை சென்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.