ADDED : நவ 08, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
கோபி:மொடச்சூர்
தான்தோன்றியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா டிச., மாதம்
நடக்கிறது. இதை முன்னிட்டு தற்காலிக கடைகளுக்கு சுங்கம்
வசூலிக்கும் உரிமம் உட்பட ஐந்து இனங்களுக்கான பொது ஏலம் நடந்தது.
இதற்கான உரிமத்தை ஈரோட்டை சேர்ந்த ரமேஷ், 12.76 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
எடுத்தார். ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யும் உரிமத்தை, கோபியை
சேர்ந்த சஞ்சீவி, 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். மூன்று
இனங்களுக்கான ஏலம் நவ.,25ம் தேதி நடக்கவுள்ளது.
