தற்காலிக பட்டாசு கடை அனுமதி: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை
தற்காலிக பட்டாசு கடை அனுமதி: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை
ADDED : செப் 25, 2026 06:59 AM

ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடை
அமைக்க, பொது இ---சேவை மையங்களில் உரிய சான்றுகளுடன், அக்.,18க்குள்,
600 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க, சில தினங்களுக்கு முன் ஈரோடு மாவட்ட
நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அக்.,18-க்கு பின் வரும்
விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என மாவட்ட நிர்வாகம்
அறிவித்துள்ளதால், பலரும் தற்காலிக பட்டாசு கடை அமைக்க பொது இ--சேவை
மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து வருகின்றனர்.
வங்கி கணக்கு ேஹக்
பொது
இ--சேவை மைய நிர்வாகிகள் கூறுகையில்,'இ--சேவை மையம் தொடங்கும்போது,
எங்களுக்கு, 300-க்கும் மேற்பட்ட அரசு சார்ந்த ஆன்லைன் சேவை
வழங்கப்பட்டு விடும். அதில், பட்டாசு கடைகளுக்கு தற்காலிக உரிமம்
வழங்கும் சேவையும் ஒன்று. பலரும் அதை உணராமல், பொது இ--சேவை மையத்துக்கு
சென்றால் செலவாகும் என நினைத்து, சுயமாக ஆன்லைனில் சேவை பெற
முயற்சிக்கின்றனர். ஈரோட்டில் பலரது வங்கி கணக்கை 'ஹேக்' செய்து பணம்
பறிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார்
கூறியதாவது: தற்போது தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி பெற,
இ--சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெளிவாக
அறிவுறுத்தியும், பலரும் சுயமாக ஆன்லைனில் சென்று விண்ணப்பித்து
பணத்தை இழந்துள்ளனர். தங்கள் பெயரில் சட்டவிரோதமான பார்சல்
வந்துள்ளதாக கூறி போலீசார் போல, வாட்ஸ் ஆப் வீடியோ காலில் வந்து மிரட்டி
பணம் பறிப்பர்.
பல்வேறு மோசடி புகார்
ஆன்லைனில் வேலைவாய்ப்பு, பங்குச்சந்தை முதலீட்டில் பணம் இரட்டிப்பு, புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டுவது, சமூக
வலைதளங்களில்
போலி விளம்பரம், லிங்க்குகள், ஆர்.டி.ஓ., அபராத சலான்கள்,
வங்கிக்கணக்கில் பான்கார்டு, ஆதார் கார்டு அப்டேட் செய்ய
வில்லை
எனக்கூறி புதுப்புது வடிவத்தில் பல்வேறு மோசடி புகார் வந்து கொண்டே
உள்ளன. இதுபோன்ற மோசடி அழைப்பு வந்தால் உடனடியாக, 1930 என்ற எண்ணிலோ,
www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலோ புகார்
தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்களுடைய புகைப்படங்களை சமூக
வலைதளங்களில் பதிவிட்டால், அதையும் தவறாக சித்தரித்து மர்ம கும்பல்
பணம் கேட்டு மிரட்டக்கூடும். இந்த விவகாரத்தில் பெண்களும்,
மாணவியரும் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினர்.
