/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தற்காலிக கடைகள் ரூ.4 லட்சத்துக்கு ஏலம்
/
தற்காலிக கடைகள் ரூ.4 லட்சத்துக்கு ஏலம்
ADDED : பிப் 01, 2025 07:03 AM
சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச விழா தேரோட்டம் வரும், 11ம் தேதி நடக்கிறது. இந்த விழா, ௧4 நாள் நடக்கிறது. இதை-யொட்டி பிப்.,10 ம் தேதி முதல் 16ம் தேதி வரை மலை கோவில் அடிவாரம் மற்றும் பார்க்ரோடு, நான்கு ராஜவீதிகளில் தற்காலிக கடை அமைக்கப்படும். இதற்கான சுங்கம் வசூல் செய்ய பொது ஏலம், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலு-வலர் மகேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.
ஏலத்தில், 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மயி-லாடி தங்கவேல், 4.09 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். திரு-விழா நாட்களில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யும் ஏலத்தில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னிமலை கோபால், ௧.௮௧ லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.