/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜவுளி வியாபாரிகள், விசைத்தறியாளர் இன்று 'ஸ்டிரைக்'
/
ஜவுளி வியாபாரிகள், விசைத்தறியாளர் இன்று 'ஸ்டிரைக்'
ஜவுளி வியாபாரிகள், விசைத்தறியாளர் இன்று 'ஸ்டிரைக்'
ஜவுளி வியாபாரிகள், விசைத்தறியாளர் இன்று 'ஸ்டிரைக்'
ADDED : பிப் 28, 2024 02:14 AM
ஈரோடு:வருமான
வரி சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி, ஜவுளி வியாபாரிகள், விசைத்
தறியாளர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர், ஈரோடு மாவட்டத்தில் இன்று
வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
(எம்.எஸ்.எம்.இ.,) வணிக கடன்களை, 45 நாட்களுக்கு மேல் நிலுவையில்
செலுத்தாமல் வைத்திருந்தால், அத்தொகையை வருமானமாக கருதி, வருமான
வரி செலுத்த வேண்டும் என வருமான வரியில் மாறுதல் செய்துள்ளனர். இதை
திரும்ப பெற வேண்டும். அல்லது அடுத்தாண்டு மார்ச் வரை ஒத்தி வைக்க
வலியுறுத்தி, வேலை நிறுத்தம் நடக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு
விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் கந்தவேல்
கூறியதாவது: இச்சட்டத்தால் ஜவுளி சார்ந்த அனைத்து தொழில்களும்
பாதிக்கும். அந்த அடிப்படையில் ஈரோடு, நாமக்கல், சேலம், விருதுநகர்
உட்பட பல மாவட்டங்களில் உள்ள விசைத்தறியாளர்கள்பங்கேற்கிறோம்.
ஈரோடு பகுதியில், 40,000 விசைத்தறிகள், திருச்செங்கோடு பகுதியில்,
10,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வரும், இன்று காலை, 8:00 மணி முதல்
இரவு, 8:00 மணி வரை ஒரு ஷிப்ட் வேலை நிறுத்தம் செய்கிறோம். 1
லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். 12 மணி
நேரத்தில், ஈரோடு பகுதியில் மட்டும், 30 லட்சம் மீட்டருக்கு மேல் துணி
உற்பத்தி தடைபடும். இதன் மதிப்பு, 7 கோடி ரூபாய்க்கு மேலாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

