/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி நிர்வாகிகளுக்கு நன்றி
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி நிர்வாகிகளுக்கு நன்றி
ADDED : மார் 31, 2025 02:58 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டி-யிட்ட தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றார். இந்நி-லையில் தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முக-வர்கள், உறுப்பினர்
களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், திண்டலில் நேற்று மாலை நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி வரவேற்று பேசினார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள், உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து காணொலி காட்சியில் பேசினார். கூட்டத்தில் எம்.பி.,
க்கள் பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் சந்திர
குமார், வெங்கடாசலம், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மத்திய மாவட்ட செயலாளர் தோப்பு வெங்கடா-சலம், மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.