/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பு.புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில்வரும் 21ம் தேதி 18ம் படி திறப்பு
/
பு.புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில்வரும் 21ம் தேதி 18ம் படி திறப்பு
பு.புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில்வரும் 21ம் தேதி 18ம் படி திறப்பு
பு.புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில்வரும் 21ம் தேதி 18ம் படி திறப்பு
ADDED : டிச 19, 2024 01:15 AM
பு.புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில்வரும் 21ம் தேதி 18ம் படி திறப்பு
புன்செய் புளியம்பட்டி, டிச. 19-
புன்செய்புளியம்பட்டி, ஐயப்பன் கோவிலில், 18ம்
படி திறப்பு வரும், 21ம் தேதி நடக்க உள்ளது.
புன்செய்புளியம்பட்டி, சத்தி சாலை நேரு நகரில் சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஐயப்பனுக்கு, சபரிமலையில் உள்ளது போன்று, 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டு
தோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை, 18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி இந்தாண்டு வரும், 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு தத்துவங்களை விளக்கும், 18ம் படி, குருசாமி முன்னிலையில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.
அன்று காலை முதல் மாலை, 7:00 மணி வரை ஆண், பெண் இருபாலரும், 18ம் படியேறி ஐயப்பனை தரிசனம் செய்யலாம். இரவு, 7:00 மணிக்கு, 18ம் படிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு படி பூஜை நடக்கிறது. அதன்பின் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஐயப்ப
பக்தர்கள் செய்து வருகின்றனர்.