ADDED : நவ 06, 2024 01:09 AM
கந்த சஷ்டி 4ம் நாள் விழா கோலாகலம்
சென்னிமலை, நவ. 6-
சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. நான்காம் நாளான நேற்று, யாக பூஜை, ஹோமம், பூர்ணாகுதியை தொடர்ந்து. 108 வகை திரவியங்களுடன் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது.
பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து, மலை கோவிலுக்கு செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை, 5:40 மணிக்கு மலை கோவிலில் இருந்து, படிக்கட்டுகள் வழியாக உற்சவமூர்த்திகள் அடிவாரத்திற்கு அழைத்து வரப்படும். அங்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடக்கும். இதை தொடர்ந்து இரவு, 8:30 மணிக்கு மேல், சென்னிமலை நகரின் நான்கு ராஜவீதிகளிலும் சூரசம்ஹார நிகழ்வு நடக்கும். 8ம் தேதி கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடக்கிறது.
* கோபி பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், நான்காம் நாள் சஷ்டி விழாவில் நேற்று, பச்சைமலையில் சத்ரு சம்ஹார, திரிசதை அர்ச்சனை, சண்முகர் அர்ச்சனை நடந்தது. பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை, லட்சார்ச்சனை, யாகசாலை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.