/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய்கள் கட்டுப்பாட்டில் 5௦வது வார்டு இரவானாலே அலறும் ஹவுசிங் யூனிட் மக்கள்

ADDED : ஜன 14, 2024 11:33 AM
ஈரோடு: மாநகரில் பெருகியுள்ள தெருநாய்களால், மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி, 50வது வார்டு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட்-1ல், 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள், 24 மணி நேரமும் சுற்றி திரிகின்றன. டூவீலரில் செல்வோரை துரத்தி சென்று கடிப்பது, வாகன விபத்தை ஏற்படுத்தும் வகையில் துரத்துவது, இரவில் துாங்க விடாமல் குரைப்பது, நடந்து செல்வோர் மீது ஆக்ரோஷமாக பாய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறது. பகலில் இப்பகுதியில் சென்று வர முடியும் நிலை உள்ளது. இரவில் இப்பகுதி தெருநாய்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.