/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடிகர் தந்த ஜூஸ் பாட்டில் மத வாசகத்தால் பரபரப்பு
/
நடிகர் தந்த ஜூஸ் பாட்டில் மத வாசகத்தால் பரபரப்பு
ADDED : அக் 20, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடிகர் தந்த ஜூஸ் பாட்டில்
மத வாசகத்தால் பரபரப்பு
சத்தியமங்கலம், அக். 20-
சினிமா துணை நடிகர் பெஞ்சமின் மற்றும் சிலர், சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு காரில் நேற்று மதியம் வந்தனர். அங்கிருந்த மக்களுக்கு ஜூஸ் பாட்டில் வழங்கினர். அதில் கிறிஸ்தவ மதம் சம்மந்தமான வாசகம் எழுதியிருந்தது.அதைப்படித்த ஒரு சிலர், அவர்களை சுற்றி வளைத்தனர். யார் நீங்கள், எதற்காக வந்தீர்கள், மத மாற்றம் செய்கிறீர்களா? என கேள்வி கேட்டு சத்தமிட்டனர். இதனால் தன்னுடன் வந்தவர்களை காரில் ஏற்றிக்கொண்டு, பெஞ்சமின் உடனடியாக கிளம்பி விட்டார். இது தொடர்பான வீடியோ பரவி வருகிறது.