/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே நோக்கம்'
/
'கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே நோக்கம்'
'கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே நோக்கம்'
'கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே நோக்கம்'
ADDED : ஜூலை 17, 2025 01:34 AM
கோபி, ''கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் முன்கூட்டியே திறக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமாக உள்ளது,'' என, வீட்டு வசதித்
துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பங்கேற்ற, வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற பின் நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில், 340 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்து, 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் முன்கூட்டியே திறக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமாக உள்ளது. ஆனால், அந்த வாய்க்காலில் சில இடங்களில் திட்டப்பணிகள் நடக்கின்றன. அப்பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி உள்ளோம். பாசனத்துக்கு நீர் திறப்பு என்ற விவசாயிகளின் கோரிக்கை, கண்டிப்பாக கவனிக்க வேண்டிய கோரிக்கையாகும். அதேசமயம் திட்டப்பணிகளும் நடக்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்பணிகள் அனைத்தும் முடிந்த பின், பாசனத்துக்கு நீர் திறப்புக்கான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், கோபி தாசில்தார் சரவணன், ஈரோடு தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், கோபி நகர செயலாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.