/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீரப்பன் சத்திரத்தில் டூவீலர் திருடிய ஆசாமிகள் 'சிசிடிவி'யில் சிக்கியாச்சு; போலீசிடம் எப்போ?

ADDED : நவ 28, 2025 12:54 AM
ஈரோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் ராஜாஜி வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த, 24ம் தேதி நள்ளிரவு, 12.15 மணிக்கு இரு மர்ம ஆசாமிகள், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டூவீலரை திருடி சென்றனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆசாமிகள், டூவீலரை திருடி செல்லும் காட்சிகள், 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. போதையில் தள்ளாடியபடி வரும் இருவரும், டூவீலரின் சைடு லாக்கை லாவகமாக உடைத்து திருடி செல்கின்றனர்.
மாநகரின் ஒரு சில இடங்களில் ஏற்கனவே முகமூடி ஆசாமிகள் நடமாட்டம் இருப்பது, இதே சிசிடிவி கேமராவால் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது போதை ஆசாமிகளும் சேர்ந்துள்ளது, பொதுமக்களை அதிர்ச்சி அடைய
வைத்துள்ளது.