ADDED : நவ 28, 2025 12:54 AM
ஈரோடு, ஈரோடு வ.உ.சி., மார்க்கெட்டில் இம்மாத துவக்கத்தில் ஒரு கிலோ முருங்கைக்காய், 80 - 100 ரூபாயாக இருந்தது. வரத்து குறைவால் கடந்த வாரம், 300 ரூபாயாக உயர்ந்த நிலையில், 480 ரூபாயாக நேற்று எகிறியது. சில்லரை விலையில் ஒரு முருங்கைக்காய் விலை, 70 ரூபாய்க்கு விற்றது. பச்சை பட்டாணி ஒரு கிலோ, 180ல் இருந்து உயர்ந்து, 300 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது.
இதேபோல் தக்காளியும் வரத்து மற்றும் பனிப்பொழிவால் விளைச்சல் பாதித்து, கிலோ, 70 முதல், 80 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது.
மார்க்கெட்டில் நேற்று பிற காய்கறி விலை நிலவரம் (கிலோ-ரூபாய்): உருளை-45, பெரிய வெங்காயம்-40, சின்ன வெங்காயம்-60, கோஸ்-35, பீட்ரூட்-80, பீன்ஸ்-60, இஞ்சி-90, பச்சை மிளகாய், 60, கத்தரி-60, வெண்டைக்காய்-50, புடலை-40, பாவைக்காய்-50, கருப்பு அவரை-90, பீர்க்கங்காய்-60, சுரைக்காய்-30, சவ்சவ்-30, கருணைக்கிழங்கு-50 ரூபாய்க்கும்
விற்றது.

