ADDED : நவ 03, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் மீனாட்சி, 48; இவரின் தாயார் சரஸ்வதி, 72; கடந்த, 29ம் தேதி காலை நடைபயிற்சி சென்ற சரஸ்வதி, வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் மீனாட்சி புகார் கொடுத்திருந்தார். 'சிசிடிவி' கேமரா காட்சிகளை சித்தோடு போலீசார் ஆய்வு செய்ததில், அன்றைய தினம் மாலையில், பவானி கூடுதுறை படித்துறையில் காவிரி ஆற்றில் இறங்கிய காட்சி பதிவாகி
இருந்தது.
நேற்று முன்தினம் மாலை கோணவாயக்கால் ராணாதோட்டம் காவிரி ஆற்றில் சரஸ்வதி சடலம் ஒதுங்கியிருந்தது. உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

