/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தண்ணீர் தொட்டி இடிந்ததில் கிணற்றில் விழுந்த சிறுவன்
/
தண்ணீர் தொட்டி இடிந்ததில் கிணற்றில் விழுந்த சிறுவன்
தண்ணீர் தொட்டி இடிந்ததில் கிணற்றில் விழுந்த சிறுவன்
தண்ணீர் தொட்டி இடிந்ததில் கிணற்றில் விழுந்த சிறுவன்
ADDED : மே 03, 2024 06:44 AM
காங்கேயம் : காங்கேயத்தை அடுத்த ஆலாம்பாடி கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் பால பிரனேஷ், 15; அப்பகுதியில் உள்ள பழனிச்சாமி என்பவரது தோட்டத்தில், பம்ப் செட் மூலம் தொட்டியில் விழுந்த தண்ணீரில் நேற்று முன்தினம் மாலை குளித்து கொண்டிருந்துள்ளான்.
அப்போது எதிர்பாராத விதமாக தொட்டி இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றில் 2 அடி ஆழம் மட்டுமே தண்ணீர் இருந்ததால் சிறுவன் சத்தமிட்டான். அக்கம்பக்கத்தினர் தகவலின்படி சென்ற காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சிறுவனை உயிருடன் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர். இடது பக்க தோள்பட்டையில் சிராய்ப்பு காயம் ஏற்பட்ட சிறுவனுக்கு, காங்கேயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.