ADDED : செப் 25, 2024 01:28 AM
ஊருக்குள் வராத
பஸ் சிறைபிடிப்பு
ஈரோடு, செப். 25-
சிவகிரியை அடுத்த கந்தசாமிபாளையம், தாண்டாம்பாளையம் பகுதிக்கு ஈரோடு-வெள்ளகோவில், மூலனுார் செல்லும் தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் வந்து செல்லும் வகையில் வழித்தடம் உள்ளது. ஆனால் பல மாதங்களாக தனியார் பஸ்கள் வராமல், நெடுஞ்சாலை வழியே செல்வதால், இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கொல்லன்கோவில் பேரூராட்சி நான்காவது வார்டு கவுன்சிலர் ரேவதி தலைமையிலான மக்கள், அமைச்சர் முத்துசாமியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மோளபாளையம் வந்த எல்.கே.எம்., தனியார் பஸ்சை மக்கள் சிறைபிடித்தனர். கந்தசாமிபாளையம், தாண்டாம்பாளையத்துக்கு வராதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். சிவகிரி போலீசார் மக்களை சமாதானம் செய்தனர். அனுமதி பெற்ற வழித்தடத்தில் பஸ்சை இயக்க அறிவுறுத்தினர். இதனால் பஸ் சிறைபிடிப்பு, 20 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.