/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அலகுமலை கோவிலில் ரூ.200 வசூல் கண்டு கொள்ளாத அறநிலையத்துறை
/
அலகுமலை கோவிலில் ரூ.200 வசூல் கண்டு கொள்ளாத அறநிலையத்துறை
அலகுமலை கோவிலில் ரூ.200 வசூல் கண்டு கொள்ளாத அறநிலையத்துறை
அலகுமலை கோவிலில் ரூ.200 வசூல் கண்டு கொள்ளாத அறநிலையத்துறை
ADDED : நவ 05, 2024 06:39 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊதியூர் அருகேயுள்ள, அலகுமலை முத்-துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், ஹிந்து சமய அறநிலை-யத்துறை பராமரிப்பில் இருக்கிறது. இருப்பினும், கோவில் விழாக்களை, பக்தர்கள் அடங்கிய கமிட்டி ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டா-டப்படுகிறது. சில ஆண்டுகளாக, கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள், கோவிலில் வந்து காப்புக்கட்டுகின்றனர். அதன்படி, கடந்த, 2ம் தேதி, ஏராளமானோர் காப்புக்கட்டினர். இருப்பினும், கந்தர்சஷ்டி விழாக்குழு சார்பில், 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்-கப்பட்டிருந்ததால், அதிருப்தி அடைந்தனர்.இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், 'அலகுமலை கோவிலில், ஏராளமான பக்தர்கள் வந்தாலும், உரிய அடிப்படை வசதி செய்யவில்லை. சஷ்டி விரதம் இருக்க காப்புக்கட்ட, 200 ரூபாய் கட்டாயம் கட்டாயமாக வசூலிக்கப்பட்டது; பணம் கையில் இல்லாதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஹிந்து சமய அறநிலையத்துறை, முறைப்படுத்த வேண்டும்' என்றனர். இதுகு-றித்து கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) சீனிவாசனிடம் கேட்டபோது, ''அலகுமலை கோவிலில், காப்புக்கட்ட, 200 ரூபாய் கட்டணம் வசூலித்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். சூரசம்ஹார விழாவுக்கு, போலீஸ் பாதுகாப்பு உட்-பட, அனைத்து வசதிகள் செய்யப்படும்,'' என்றார்.

