/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2 கோடியாவது பயனாளிக்கு பெட்டகம் வழங்கிய முதல்வர்
/
2 கோடியாவது பயனாளிக்கு பெட்டகம் வழங்கிய முதல்வர்
ADDED : டிச 20, 2024 01:18 AM

ஈரோடு:'மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், இரண்டு கோடியாவது பயனாளிக்கு, வீடு தேடி சென்று மருந்து பெட்டகத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் 12:40 மணிக்கு ஈரோடு வந்தார்.
முன்னதாக, ஈரோட்டுக்கு வரும் வழியில் கதிரம்பட்டி பஞ்., நஞ்சனாபுரம் கிராமத்தில், சுந்தராம்பாள், 56, என்ற உயர் ரத்த அழுத்த பயனாளிக்கு, மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
“இதற்கு முன் மருத்துவ சிகிச்சை பெற்றீர்களா... இத்திட்டத்தில் மருத்துவர் எப்போது வந்து சிகிச்சை அளித்தனர்; என்ன வேலை செய்கிறீர்கள்,” என கேட்டறிந்தார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், இவர் இரண்டு கோடியாவது பயனாளி ஆவார். அங்கிருந்து சிறிது துாரத்தில் உள்ள வசந்தா, 60, என்ற மூதாட்டிக்கும், மருத்துவம் திட்டத்தில் பிசியோதெரபி சிகிச்சை வழங்குவது பற்றி கேட்டறிந்தார்.
அப்போது முதல்வருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி., உடனிருந்தனர்.