ஈரோடு, ஈரோட்டில் அரசு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், இரவு ஈரோட்டுக்கு வருகை புரிந்தார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் அருகே 7:50 மணிக்கு முதல்வருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், எம்.பி.,க்கள் பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் அந்தியூர் வெங்கடாசலம், ஈரோடு கிழக்கு சந்திரகுமார், மேயர் நாகரத்தினம் உட்பட பலர் வரவேற்பு வழங்கினர். பின் பெருந்துறை பிரிவு சாலை, வாய்க்கால்மேடு, மேட்டுக்கடை, திண்டல் போன்ற இடங்களில் பொதுமக்கள், தி.மு.க.,வினர் வரவேற்பு வழங்கினர்.
இரவு, 8:40 மணிக்கு காளிங்கராயன் இல்லத்துக்கு முதல்வர் வந்து சேர்ந்தார். இங்கு ஓய்வெடுத்துவிட்டு இன்று காலை விழாக்களில் பங்கேற்கிறார்.

