ADDED : ஆக 18, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:பெருந்துறை அடுத்த நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. இங்கு கி.மு. 4ம் நுாற்றாண்டில் இருந்து 5ம் நுாற்றாண்டை சேர்ந்த மக்கள் வாழ்ந்ததற்கான வாழ்வியல் இடத்தின் எச்சங்களும், இறந்தவர்களை புதைக்க பயன்படுத்தும் ஈமக்காட்டு பகுதி எச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அதிககளவில் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும் இங்கு கிடைக்க பெறுகின்றன. இந்நிலையில் கொடுமணல் அகழாய்வு பகுதியில் கற்பதுக்கை, நெடுநிலை நடுகல், கற்குவை ஆகியவற்றை, கலெக்டர் கந்தசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.