/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று சுதந்திர தின விழா கலெக்டர் கொடியேற்றுகிறார்
/
இன்று சுதந்திர தின விழா கலெக்டர் கொடியேற்றுகிறார்
ADDED : ஆக 15, 2025 03:26 AM
இன்று நாடு முழுதும், 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், காந்தி மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. காலை, 9:05 மணிக்கு, கலெக்டர் பிருந்தாதேவி, தேசிய கொடியேற்றுகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, மூவர்ண பலுான்களை பறக்க விடுகிறார்.
தொடர்ந்து விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களை கவுரவிக்கிறார். அதேபோல் போலீசில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்குகிறார். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டுகிறார். மேலும் பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பள்ளி கல்வித்துறை சார்பில், 'இயற்கை, மலைவளம், நாட்டுப்பற்று, இது எங்கள் பாரதம்' உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை வலியுறுத்தும்படி, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
இதனால் காந்தி மைதானம் முழுதும், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி வைத்து அனைவரையும் சோதனை செய்த பின்பே, உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் மாநகராட்சி அலுவலகம், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மூவர்ண கொடி ஏற்றப்படுகிறது. ரயில்வே கோட்டம், பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில், சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அனைத்து இடங்களிலும், அதற்கான ஏற்பாடுகள் நேற்று நடந்தன.
மேலும் அனைத்து ஊராட்சிகளிலும், இன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது.