/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசியக்கொடி நிறங்கள் உணர்த்துவது என்ன...
/
தேசியக்கொடி நிறங்கள் உணர்த்துவது என்ன...
ADDED : ஆக 15, 2025 03:27 AM
இந்திய தேசியக்கொடியில், 3 வண்ணங்கள் உள்ளன. 3 பங்கு நீளம், 2 பங்கு அகலம் கொண்டதாக இருக்க வேண்டும். கொடி மேற்பகுதியில் உள்ள காவி நிறம் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை உணர்த்துகிறது. மக்கள் உள்ளத்துாய்மை, வாய்மை, ஒழுக்கம் உடையவர்களாக திகழ வேண்டும் என வெள்ளை நிறம் வலியுறுத்துகிறது. பச்சை நிறம் நாட்டின் இயற்கை வளத்தை உணர்த்துகிறது.
வெள்ளை நிறம் நடுவே, 24 ஆரம் கொண்ட அசோகச்சக்கரம் நீல நிறத்தில் அமைந்துள்ளது. இது வாழ்க்கையின், 24 வகை ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. தேசியக்கொடியை பிற நாட்டுக்கொடிகளுடன் ஏற்றினால், முதலில் நம் கொடியை உயர்த்தி கடைசியில் தான் கீழே இறக்க வேண்டும். அனைத்து கொடி கம்பங்களும் சம அளவில் இருக்க வேண்டும்.
பிற நாட்டு கொடிகளுடன் நேர் வரிசைப்படுத்தும்போது நம் கொடி வலது ஓரம் இடம் பெறவேண்டும். வட்ட வடிவில் எனில் நம் கொடி முதலிலும், மற்ற கொடிகள் கடிகார வரிசையில் இடம் பெற வேண்டும்.
இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களுடன், நம் தலைவர்கள் காரில் செல்லும்போது வலது புறம் இந்திய தேசியக் கொடியும், இடது புறம் சம்பந்தப்பட்ட நாட்டின் கொடியும் இருக்க வேண்டும்.