/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணிகளை முடிக்காமல் ஏலம் நடத்திய மாநகராட்சி; சோலார் பஸ் ஸ்டாண்டில் தொடரும் கண்ணாமூச்சி
/
பணிகளை முடிக்காமல் ஏலம் நடத்திய மாநகராட்சி; சோலார் பஸ் ஸ்டாண்டில் தொடரும் கண்ணாமூச்சி
பணிகளை முடிக்காமல் ஏலம் நடத்திய மாநகராட்சி; சோலார் பஸ் ஸ்டாண்டில் தொடரும் கண்ணாமூச்சி
பணிகளை முடிக்காமல் ஏலம் நடத்திய மாநகராட்சி; சோலார் பஸ் ஸ்டாண்டில் தொடரும் கண்ணாமூச்சி
ADDED : மார் 07, 2025 07:33 AM
ஈரோடு; பணிகளை பூர்த்தி செய்யாமல், பயன்பாட்டுக்கும் வராத, சோலார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கடைகளை ஏலத்துக்கு விட்ட, மாநகராட்சி நிர்வாகத்தின் செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமாக, 24 ஏக்கரில், 63.50 கோடி ரூபாய் செலவில், சோலாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வணிக வளாகமும் கட்டப்பட்டுள்ளது. வணிக வளாத்தில், 134 கடைகள், 6 ஸ்டால்கள், ஒரு மருந்தகம், நான்கு பொருள் பாதுகாப்பு அறை, இரு ஹோட்டல், இரு தங்கும் விடுதிகள், ஒரு பெரிய ஹால் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் இதற்கான பொது ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 14 கடைகள் மட்டுமே ஏலம் போனது. மீதியை, 15 நாட்கள் கழித்து ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் கூறியதாவது:சோலார் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. மின் சப்ளை பணிகள் தற்போது தான் துவங்கி இருக்கிறது. குடிநீர் மற்றும் தண்ணீர் வசதிக்கு எவ்வித ஏற்படும் செய்யப்படவில்லை.
அங்குள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து நிரந்தர பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் வழியை தார்ச்சாலையாக மாற்றவில்லை. பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு பஸ் கூட இதுவரை வந்து சென்றது கிடையாது. கார், ஆட்டோ ஓட்டி பழகும் பயிற்சி கூடமாக, காலை, மாலை நடைபயிற்சி மைதானமாகவும், இரவில் உல்லாசபுரியாகவும் விளங்குகிறது.
ஒரு பஸ் கூட வந்து செல்லாத பஸ் ஸ்டாண்டில், வியாபாரிகள் வணிக வளாக கடைகளை எப்படி ஏலத்துக்கு எடுப்பர். அதனால்தான், 14 கடைகள் மட்டுமே ஏலம் போயுள்ளது. எடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட் எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பதும் யாருக்கும் தெரியாது. வணிக வளாகத்திலும் கட்டுமான பணி, குடிநீர் வசதி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவுபெறவில்லை. அடிப்படை வசதிகள் முழுமை அடையாத, ஆள் நடமாட்டமே இல்லாத பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு அம்சங்களும் கேள்விக்குறியாக உள்ளது.பஸ் ஸ்டாண்ட் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என தெளிவான அறிவிப்பு இருந்தால் கூட வியாபாரிகள் கடைகளை ஏலத்தில் எடுக்க முன் வருவர்.
பஸ் ஸ்டாண்டுக்கு மக்களிடம் உள்ள வரவேற்பு, பஸ் ஸ்டாண்ட் செயல்பாடு, வியாபார பரிவர்த்தனை அறிந்த பின்னரே கடைகளுக்கு கிராக்கி ஏற்படும். பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், பயன்பாட்டுக்கே வராத, பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கடைகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் எவ்வாறு பொது ஏலம் நடத்தியது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு கூறினர்.
அறிகுறிய காணோம்
கடந்த, 2021 நவ., மாதமே சோலார் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வரும் என்று, மாவட்ட அமைச்சர் முத்துசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்றாண்டுகள் நிறைவு பெற்றும், பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று, அ.தி.மு.க.,வினர் வருத்தம் தெரிவித்தனர்.