/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்ஸ்பெக்டரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்
/
இன்ஸ்பெக்டரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்
ADDED : மார் 16, 2024 01:13 AM
கொடுமுடி:கொடுமுடி
பேரூராட்சி மன்ற தலைவரின் கணவர் சுப்ரமணி. கடந்த, 12-ம் தேதி
பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரிடம் சுப்ரமணி
பேசிக்கொண்டிருந்தார். அப்போது வந்த ஏமகண்டனுாரை சேர்ந்த பா.ஜ.,
நிர்வாகி பாலசுப்ரமணிக்கும், சுப்ரமணிக்கும் வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது.
இதில் சுப்ரமணியை, பாலசுப்ரமணி கத்தியால்
குத்தியுள்ளார். இது தொடர்பாக இருவர் மீதும் கொடுமுடி போலீசில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணைக்கு,
பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்ற கொடுமுடி இன்ஸ்பெக்டர் ஆனந்த்,
துணைத்தலைவர் ராஜாகமால்ஹசன் உள்ளிட்ட சிலரை மிரட்டினாராம். இதை
கண்டித்து பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலகத்தில் நேற்று
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுமுடி தாசில்தார்
பாலகுமார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை
கைவிட்டனர்.

