/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகனின் அசல் சான்றிதழ் கோரி எஸ்.பி.,யிடம் தம்பதியினர் மனு
/
மகனின் அசல் சான்றிதழ் கோரி எஸ்.பி.,யிடம் தம்பதியினர் மனு
மகனின் அசல் சான்றிதழ் கோரி எஸ்.பி.,யிடம் தம்பதியினர் மனு
மகனின் அசல் சான்றிதழ் கோரி எஸ்.பி.,யிடம் தம்பதியினர் மனு
ADDED : மார் 07, 2024 02:29 AM
ஈரோடு, ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் ஆப்பக்கூடல், ஆ.புதுப்பாளையம் சக்தி நகரை சேர்ந்த ராஜேந்திரன், 44, இவரது மனைவி தங்கமணி ஆகியோர் ஈரோடு எஸ்.பி.ஜவகரிடம் அளித்த
மனு:
நாங்கள் கட்டட தொழிலாளர்கள். எங்களுக்கு ஜனார்த்தன், 22, என்ற மகன், ஒரு மகள் உள்ளனர். என் மகன் எம்.பி.பி.எஸ். படிக்க ஆசைபட்டார். ஊத்தங்கரையை சேர்ந்த கிருபானந்தம், என் மகனின் நண்பர் மூலம் அறிமுகமாகி, மகனை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க அழைத்து செல்வதாக கூறினார். கிருபானந்தம் இதேபோன்று, 20 மாணவர்களை ரஷ்யா அழைத்து சென்று மருத்துவ படிப்புக்கு சேர்த்துள்ளார்.
கடந்த, 2021ல் என் மகன் ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்கு சேர்ந்தார். அதற்கு புரோக்கர் கமிஷனாக கிருபானந்தத்திடம் ரூ.2.40 லட்சம் கொடுத்தோம். அப்போது கொரோனா காலகட்டம் என்பதால், என் மகன் ஓராண்டு ஆன்லைன் மூலம் மருத்துவம் படித்தார். 2022ல் ரஷ்யாவுக்கு மருத்துவ படிக்க சென்றார். அப்போது, என் மகனின் அனைத்து அசல் சான்றிதழ்களை கிருபானந்தம் வைத்துக்கொண்டார்.
அவ்வப்போது அவர் கேட்கும் போதெல்லாம் நாங்கள் இதுவரை, ரூ.10 லட்சத்துக்கு மேல் அனுப்பி உள்ளோம். என் மகன் ஏப்ரலில் மருத்துவ தேர்வு எழுத உள்ளார். அதற்காக என் மகனின் அசல் சான்றிதழை மருத்துவ பல்கலைக்கழகத்தினர் கேட்டுள்ளனர். ஆனால் கிருபானந்தம் அசல் சான்றிதழை கொடுக்காமல், பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.
ஏற்கனவே அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. அசல் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும். என் மகன் மன உளைச்சலில் உள்ளார். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளனர்.

