ADDED : ஜூன் 13, 2026 03:57 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூரை
அடுத்த பர்கூர்-கர்கேகண்டி சாலையில், போதை தடுப்பு பிரிவு எஸ்.ஐ.,
கார்த்தி தலைமையிலான போலீசார், நேற்று ரோந்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவிலிருந்து பைக்கில் வந்த, பர்கூர்மலை பெஜ்ஜில்பாளையம்
கோவிலுாரை சேர்ந்த மாதேஷ், 35, என்பவரிடம் சோதனை செய்தனர்.
அவரிடம்,
2 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது. கர்நாடக மாநிலம் ராமாபுராவில்
இருந்து சொந்த உபயோகத்துக்கு வாங்கி வந்ததாக கூறினார். அவரை கைது
செய்து, டூவீலர் மற்றும் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
