/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திரு.வி.க., பார்க் சுற்றுச்சுவர் சேதம் தட்டியை வைத்து அடைத்த அவலம்
/
திரு.வி.க., பார்க் சுற்றுச்சுவர் சேதம் தட்டியை வைத்து அடைத்த அவலம்
திரு.வி.க., பார்க் சுற்றுச்சுவர் சேதம் தட்டியை வைத்து அடைத்த அவலம்
திரு.வி.க., பார்க் சுற்றுச்சுவர் சேதம் தட்டியை வைத்து அடைத்த அவலம்
ADDED : ஆக 11, 2025 08:17 AM
ஈரோடு: ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் மாநகராட்சி சார்பில் திரு.வி.க., பார்க் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பல்வேறு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. நடைபயிற்சிக்கு நடைபாதை மற்றும் இருக்கை வசதியும் செய்யப்ட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிவறை வசதியும் உள்ளன. தினமும் காலை, 7:௦௦ மணி முதல், 9:௦௦ மணி; மாலையில், 6:௦௦ மணி முதல் இரவு, 9:௦௦ வரை திறக்கப்படுகிறது.
பார்க் நுழைவு வாயிலின் வலதுபுற காம்பவுண்ட் சுவர் சேதமடைந்துள்ளது. இதை பிளக்ஸ் தட்டிகளை வைத்து அடைத்துள்ளனர். அந்தப்பகுதியில் மீத பகுதிகளும் எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் பூங்காவில் யாரேனும் இருந்தால் உயிரிழப்பு அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 2,187 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார், 750 ரூபாய், தேன்வாழை, 700, பூவன், 620, ரஸ்தாளி, 650, மொந்தன், ௪00, ஜி-9 தார், 550, பச்சைநாடன், 520 ரூபாய்க்கும் விற்றது. கதளி கிலோ, 72 ரூபாய், நேந்திரன் கிலோ, 36 ரூபாய்க்கும் விற்றது.* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் கனகாம்பரம் ஒரு கிலோ, 800 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை-720, முல்லை-200, காக்கடா-250, செண்டுமல்லி-140, கோழி கொண்டை-150, ஜாதிமுல்லை- 600, சம்பங்கி-100, அரளி-120, துளசி-50, செவ்வந்தி-300 ரூபாய்க்கும் விற்பனையானது.* ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு, 6.5 டன் மீன் நேற்று வரத்தானது. வஞ்சிரம்- கிலோ-1,300 ரூபாய்-, வெள்ளை வாவல்-1,300, தேங்காய் பாறை-500, ஊளி-550, சங்கரா-430, மத்தி-250, சீலா-550, நெத்திலி-300, திருக்கை-400, இறால்-700, அணை மீன்களான பாறை-200, லோகு-200, நெய் மீன்-150, ஜிலேபி-140 ரூபாய்க்கும் விற்றது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, 10 டன் முருங்கை நேற்று வரத்தானது. செடி முருங்கை கிலோ, 4 ரூபாய், மர முருங்கை கிலோ, 5 ரூபாய், கருப்பு முருங்கை, 7 ரூபாய்க்கு விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 42 கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல் 95 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 21 கால்நடைகள், 10 லட்சம் ரூபாய்க்கு விற்றன.