/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆட்டோவில் சடலமாக கிடந்தவர் தறி பட்டறை தொழிலாளி
/
ஆட்டோவில் சடலமாக கிடந்தவர் தறி பட்டறை தொழிலாளி
ADDED : செப் 27, 2024 01:21 AM
ஆட்டோவில் சடலமாக கிடந்தவர் தறி பட்டறை தொழிலாளி
ஈரோடு, செப். 27-
ஈரோடு, வ.உ.சி., பூங்கா காய்கறி தினசரி மார்க்கெட்டை ஒட்டிய ஏ.பி.டி.,சாலையோரம், 25ம் தேதி அதிகாலை நின்றிருந்த ஒரு சரக்கு ஆட்டோவில், பாரம் ஏற்றும் இடத்தில், 45 வயது மதிக்கதக்க ஆண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஈரோடு, வீரப்பன்சத்திரம், தங்கவேல் வீதியை சேர்ந்த தறி பட்டறை தொழிலாளி சுரேஷ், 47; இவர் மனைவி அம்பிகா. பிளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். வீடு கட்ட சில ஆண்டுக்கு முன் சுரேஷ், கடன் வாங்கினார். கடனை செலுத்த முடியாத நிலையில், சில ஆண்டாக அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கும்படி அம்பிகா பார்த்து கொண்டார். கடந்த, 24ம் தேதி மாலை வீட்டில் இருந்து தப்பி சுரேஷ் வெளியே வந்துள்ளார்.
கடையில் சிறு ரக கத்தியை வாங்கியுள்ளார். 25ம் தேதி அதிகாலை தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் சரக்கு ஆட்டோவில், பாரம் ஏற்றும் பகுதியில் விழுந்ததில் இறந்தார். உடற்கூறு பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்
பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

