/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரபட்ச புகார் எதிரொலி: பெரிய கடைகளின் முன்பும் ஆக்கிரமிப்பு அகற்றம்

ADDED : பிப் 19, 2024 10:45 AM
ஈரோடு: ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து, மணிக்கூண்டு வழியாக சத்தி ரோடு சந்திப்பு, எல்லை மாரியம்மன் கோவில் வரை, இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தன. கடந்த, 15ம் தேதி மாநகராட்சி நிர்வாகம் சார்பில், இந்த சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. மொத்தம், 1 கி.மீ., துாரத்துக்கும் மேலாக, 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் ஒரு சில கடைக்காரர்கள், ஆக்கிரமிப்பு அகற்றத்தில் மாநகராட்சி நிர்வாகம் பராபட்சமாக செயல்படுவதாக புகார் தெரிவித்து, பணி நடந்தபோதே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 16ம் தேதி மணிக்கூண்டு சாலை, ஆர்.கே.வி.,சாலை, கிருஷ்ணா தியேட்டர், நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இரண்டாவது நாளாக நடந்தது. அப்போதும் பெரிய கடைகளுக்கு சலுகை காட்டுவதாக, சிறு கடைக்காரர்கள் குற்றம் சாட்டினர். இதனால் மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி, பிரபல இரு துணிக்கடைகளின் முன், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக அக்கடைக்காரர்களே இரும்பு சாரம் அமைத்து பணியை தொடங்கியுள்ளனர்.