மாவட்டத்தின் 2026-27ம் ஆண்டு கடன் திட்ட இலக்கு ரூ.36,305 கோடி
மாவட்டத்தின் 2026-27ம் ஆண்டு கடன் திட்ட இலக்கு ரூ.36,305 கோடி
ADDED : ஜூலை 08, 2026 05:04 AM
ஈரோடு:ஈரோடு
கலெக்டர் கந்தசாமி தலைமையில், 2026-27 ம் ஆண்டுக்கான வங்கி கடன்
திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. மாவட்ட முன்னோடி வங்கியான கனரா
வங்கி தயாரித்த கடன் திட்ட அறிக்கையில், 36,305.08 கோடி முன்னுரிமை
கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதில், விவசாயத்துக்கான
கடன் இலக்கு, 21,342 கோடி, குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான கடன்
இலக்கு, 14,211 கோடி, பிற முன்னுரிமை கடன் இலக்கு, 651 கோடி
நிர்ணயிக்கப்பட்டது. இது கடந்த, 2025-26ம் ஆண்டு இலக்கைவிட, 5,947
கோடி (19.65 சதவீதம்) அதிகம்.
கடந்த, 2025-26ம் ஆண்டு கடன் திட்ட அறிக்கைப்படி மொத்த முன்னுரிமை கடன் அளவாக,
30,258 கோடி நிர்ணயிக்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டுக்கான சாதனை
அளவாக, 32,315 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டது. இதில் விவசாய
கடன் அளவு, 18,918 கோடி, சாதனை அளவு, 19,933 கோடியாகும். குறு, சிறு,
நடுத்தர கடன் அளவு, 10,551 கோடியில், சாதனை அளவாக, 11,838 கோடி
அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நபார்டு வங்கி
உதவி பொது மேலாளர் அசோக்குமார், ஈரோடு மண்டல உதவி பொது மேலாளர்
சோமேஷ்வரராவ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் உட்பட
பலர் பங்கேற்றனர்.
