/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரி டயர் வெடித்து உயிர் தப்பிய டிரைவர்
/
லாரி டயர் வெடித்து உயிர் தப்பிய டிரைவர்
ADDED : நவ 21, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, நவ. 21-
கோபி அருகே டயர் வெடித்து, சென்டர் மீடியன் மீது லாரி மோதியதில், டிரைவர் உயிர் தப்பினார்.
சென்னையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி, வேஸ்ட் பேப்பர் ஏற்றி சென்ற லாரி, கோபி அருகே காசிபாளையம் என்ற இடத்தில் நேற்று காலை, 11:00 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் முன்பக்க டயர் வெடித்ததில், சத்தி சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதி நின்றது. லாரியை ஓட்டி வந்த, கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் முனியன், 34,காயமின்றி உயிர் தப்பினார். கடத்துார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால், போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் சத்தி சாலையில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

