ADDED : நவ 07, 2024 01:05 AM
யானை தாக்கி
விவசாயி படுகாயம்
சத்தியமங்கலம், நவ. 7-
தாளவாடி அருகே, இரவு காவலுக்கு இருந்த விவசாயியை யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட, தாளவாடி அருகே உள்ள முதியனுார் கிராமத்தை சேர்ந்த சம்பன், 55, என்பவர், அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து ராகி பயிரிட்டு இருந்தார்.நேற்று முன்தினம் இரவு, தோட்டத்திற்கு காவல் காத்து கொண்டிருந்தார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சம்பனை தாக்கியது. இதை பார்த்தவர்கள் யானையை விரட்டி விட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, முதலுதவி அளித்து பின், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆசனுார் போலீசார், தாளவாடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.