ADDED : செப் 06, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கடம்பூர் வனச்சரகம் குன்றி செல்லும் வழியில், ஒற்றை யானை சில மாதங்களாக அந்த வழியாக வரும் வாகனங்களை துரத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. குன்றி மலை கிராமத்திலிருந்து சத்தியமங்கலம் நோக்கி ஒரு அரசு பஸ், 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை சென்றது. பிரேக்கிங் மேடு என்ற இடத்தில், ஒற்றை யானை சாலையில் நின்று கொண்டிருந்தது.
இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சிறிது நேரம் கழித்து பஸ்சை இயக்கியபோது துரத்த முயன்றது. இதனால் பயணிகள் கூச்சலிடவே யானை வரவில்லை. அதே இடத்தில் யானை அரை மணி நேரமாக நின்றிருந்தது. பஸ் டிரைவரும், பயணிகளும் அமைதி காத்தனர். யானை சென்ற பிறகு பஸ் புறப்பட்டு சென்றது.