/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நான்குவழி சாலையாகும் ஈரோடு-பவானி சாலை
/
நான்குவழி சாலையாகும் ஈரோடு-பவானி சாலை
ADDED : நவ 16, 2025 01:50 AM
ஈரோடு:ஈரோடு-பவானி சாலையில் நான்கு வழி சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக பாலம் அமைப்பதற்கான பணி துவங்கியுள்ளது.
ஈரோடு-பவானி சாலை குறுகலாக உள்ளது. சாலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை எழுந்தது. தற்போது ஈரோடு-பவானி சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கி பணி துவங்கி உள்ளது. முதற்கட்டமாக சாலையோர மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. பவானி சாலையில் கிறிஸ்து ஜோதி பள்ளியில் இருந்து சத்தி சாலை வரையிலான, 2.9 கி.மீ., சாலை விரிவாக்க பணி துவங்கி நடந்து வருகிறது. இதற்கு, 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால், சிறு பாலங்கள், பாலம், சாலையோர நடைபாதை அமைக்கப்படும். நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும். தற்போது பிச்சைக்காரன் பள்ளம் ஓடையின் குறுக்கே புதிதாக பாலம் அமைப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்தவுடன் கான்கிரீட் துாண் அமைத்து, தொடர்ச்சியாக பாலம் அமைக்கப்படும்.
ஈரோடு மூலப்பட்டறை பகுதியில் இருந்து பவானி வரை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.

