/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சி குப்பை கிடங்கில் தீ 2:30 மணி நேரம் எரிந்தது
/
நகராட்சி குப்பை கிடங்கில் தீ 2:30 மணி நேரம் எரிந்தது
நகராட்சி குப்பை கிடங்கில் தீ 2:30 மணி நேரம் எரிந்தது
நகராட்சி குப்பை கிடங்கில் தீ 2:30 மணி நேரம் எரிந்தது
ADDED : மார் 15, 2024 04:09 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி குப்பை கிடங்கு, ௨:௩௦ மணி நேரம் தீப்பிடித்து எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
புன்செய்புளியம்பட்டி நகராட்சியில், 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, வாரச்சந்தை வளாகத்தில் உள்ள கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு மட்கும், மட்காத குப்பையை பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது.
குப்பை கிடங்கில் நேற்று மாலை, ௪:௦௦ மணிக்கு திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ பரவி கொழுந்துவிட்டு, 50 அடிக்கு உயரத்துக்கு கரும்புகை பரவியது.
இதைப்பார்த்த மக்கள் அச்சமடைந்து, சத்தி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டரை
மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, ௬:௩௦ மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முன்னதாக குப்பை கிடங்கு தீப்பற்றி எரிவது குறித்து நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும், அலுவலர்கள் யாரும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த, ௩௦க்கும் மேற்பட்ட மக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

