/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலியல் துன்புறுத்தலில் பாய்ந்தது குண்டர் சட்டம்
/
பாலியல் துன்புறுத்தலில் பாய்ந்தது குண்டர் சட்டம்
ADDED : ஜூலை 26, 2025 01:01 AM
ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 31; இவர் மீது, ஈரோடு டவுன், வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி, வழிப்பறி உட்பட, 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார்.
ஈரோட்டை சேர்ந்த, 13 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி விசாரித்த, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். இதை கலெக்டர்
ஏற்றதால், தமிழ்செல்வன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.