/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நெசவாளர் பிரச்னையை தீர்க்காத அரசு'
/
'நெசவாளர் பிரச்னையை தீர்க்காத அரசு'
ADDED : டிச 27, 2025 07:53 AM

அந்தியூர்: அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில், பா.ஜ., சார்பில் நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் ஜமுக்காளம், லுங்கி உள்ளிட்ட தொழிலில் நெசவாளர்
களுக்கு உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை இல்லை. இதற்-கான உரிய விலையை நிர்ணயித்து தர வேண்டியது முதல்வரின் கடமை.
ஆனால், இதுவரை நெசவாளர் பிரச்னையை தமிழக அரசு தீர்க்க-வில்லை. மத்திய அரசு, 60 வயது பூர்த்தியடைந்த விவசாயிக-ளுக்கு, பயனுள்ள திட்டத்தை வகுத்துள்ளது. இதை அந்தியூர் பகுதி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் குறை கேட்டறிந்து, மனுக்களை பெற்றார். கூட்டத்தில், 30க்கும் மேற்பட்டோருக்கு பா.ஜ., சார்பில் வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

